புதிதாக 52 பேருக்கு கொரோனா
குமரியில் புதிதாக 52 பேருக்கு கொரோனா
நாகர்கோவில்,
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதே போல குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் 394 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 19 ஆண்கள் மற்றும் 33 பெண்கள் என மொத்தம் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 17 பேர் பாதிக்கப்பட்டனர்.இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 922 ஆக உயர்ந்துள்ளது.