கடலூர் மாவட்டத்தில்புதிதாக 6 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 76 ஆயிரத்து 213 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 75 ஆயிரத்து 256 பேர் குணமடைந்த நிலையில், 896 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் புதிதாக 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்த 12 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 55 பேர் கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story