புதிதாக 65 பேருக்கு கொரோனா
குமரியில் புதிதாக 65 பேருக்கு கொரோனா
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 718 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதித்த அனைவரும் ஆஸ்பத்திரியிலும், வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story