குமரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா


குமரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா
x

குமரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே போல குமரி மாவட்டத்திலும் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வாரத்துக்கு 3 பேர் முதல் 4 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 25-ந் தேதி 7 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினமும் 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Next Story