தமிழகத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 144 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 195 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 927 லிருந்து 1,021 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று 101 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் 95, திருவள்ளூரில் 33, காஞ்சிபுரத்தில் 30, செங்கல்பட்டில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story