கட்டிட மேஸ்திரிக்கு கொரோனா
வேலூரில் கட்டிட மேஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் மற்றும் நோய் அறிகுறி காணப்படும் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கொரோனாவினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கட்டிட மேஸ்திரியின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு பரிசோதனையும், அந்த பகுதியில் நோய் தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story