சேலம் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது


சேலம் மாவட்டத்தில்   கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்  நாளை நடக்கிறது
x

சேலம் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 29 லட்சத்து 18 ஆயிரத்து 99 பேர் கொரோனா முதல் தவணை தடுப்பூசியும், 26 லட்சத்து 76 ஆயிரத்து 707 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 34 சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களில் 8 லட்சத்து 25 ஆயிரத்து 795 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 13 லட்சத்து 59 ஆயிரத்து 791 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 1 லட்சத்து 40 ஆயிரத்து 805 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 35-வது கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 690 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் 15 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். முகாமில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.


Next Story