கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்; நாளை நடக்கிறது
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்; நாளை நடக்கிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொபுதுக்கோட்டை மாவட்டத்தில்புதுக்கோட்டை மாவட்டத்தில்புதுக்கோட்டை மாவட்டத்தில்ரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த 2021 ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை 29 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 57 ஆயிரத்து 216 (97 சதவீதம்) நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்து 78 ஆயிரத்து 68 (91 சதவீதம்) நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
15-18 வயதுக்குட்பட்ட 69 ஆயிரத்து 34 (93 சதவீதம்) நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 61 ஆயிரத்து 379 (83 சதவீதம்) நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 12-14 வயதுக்குட்பட்ட 42 ஆயிரத்து 876 (90 சதவீதம்) நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 29 ஆயிரத்து 673 (63 சதவீதம்) நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 14 ஆயிரத்து 475 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை, தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகும். 100 சதவீதம் தடுப்பூசி இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 100 இடங்களில் நடைபெறவுள்ளது. தகுதியுடைய பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.