அட்டை மில் தொழிலாளிக்கு கொரோனா


அட்டை மில் தொழிலாளிக்கு கொரோனா
x

சிவகாசி அருேக அட்டை மில் தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் இயங்கி வரும் தனியார் அட்டை மில்லில் ஒரிசாவை சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர் அட்டை மில்லுக்கு சொந்தமான குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில் சிகிச்சைக்காக எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு பணியில் இருந்த டாக்டர், சந்தேகத்தின் அடிப்படையில் வாலிபருக்கு கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



Related Tags :
Next Story