அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் விருதுநகரில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் விருதுநகரில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். இந்தநிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
கொரோனா பாதிப்பு
மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் விருதுநகரில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். டாக்டர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். எனவே அவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.