2 ஆயிரத்து 700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
2 ஆயிரத்து 700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்தாலும், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதனால் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 19 லட்சத்து 39 ஆயிரத்து 667 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதில் 18 லட்சத்து 84 ஆயிரத்து 459 பேருக்கு 2-வது தவணையும், 2 லட்சத்து 73 ஆயிரத்து 104 பேருக்கு 3-வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
அதேநேரம் 2 லட்சம் பேர் 2-வது தவணையும், 12 லட்சத்து 10 ஆயிரம் பேர் 3-வது தவணையும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்களின் வசதிக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே இதுவரை தவணை காலம் முடிந்தும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாமுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.