பேய்க்குளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்


பேய்க்குளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

பேய்க்குளம், சவேரியார்புரம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், இளமால்குளம், கருங்கடல் ஆகிய 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமில் செவிலியர்கள் ரமா, லட்சுமி, சொர்ணலதா, மெர்சி, மகேஸ்வரி பாலம்மாள் ஆகியோர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் மொத்தம் 348 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மருத்துவ அலுவலர்கள் வீரேஷ், டயானா ஆகியோர் முகாமை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஸ்குமார் உள்ளிட்ட மஸ்தூர், அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story