ஞாயிற்றுக்கிழமை நடந்த மொக சிறப்பு முகாமில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மொக சிறப்பு முகாமில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த மெகா சிறப்பு முகாமில் 52 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகம் முழுவதும் 31-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடிகள் உள்பட 1057 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் 120 இடங்களிலும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் 937 இடங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்றும் விடுபட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
52 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
இந்த முகாம்களில் முதல் தவணை தடுப்பூசியாக 7 ஆயிரத்து 600 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசியாக 22 ஆயிரத்து 800 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசியாக 12 ஆயிரத்து 700 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பூஸ்டர் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக போடப்பட்டன. மற்றவர்கள் ரூ.386 செலுத்தியும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.