982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
அதன்படி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் பஸ்நிலையங்கள், உழவர்சந்தைகள், பஜார், ஆட்டோநிறுத்தம், பள்ளிகள் என்று மொத்தம் 982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பொதுமக்களிடையே அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி போடும் பணியில் 700-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.