22 லட்சத்து 12 ஆயிரத்து 612 பேருக்கு கொரோனா தடுப்பூசி


22 லட்சத்து 12 ஆயிரத்து 612 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 22 லட்சத்து 12 ஆயிரத்து 612 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 22 லட்சத்து 12 ஆயிரத்து 612 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.

தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 32-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கையை அடுத்த, சோழபுரம் அரசு துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தவும், புதிய வகை கொரோனா வைரஸ் பரவாமல் பொதுமக்களை பாதுகாத்திடவும் சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

22,12,612

நமது மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் என 2,328 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், 2-ம் தவணை செலுத்த வேண்டியவர்கள் உள்ள கிராமங்களில் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை மொத்தம் 22 லட்சத்து 12 ஆயிரத்து 612 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 11 லட்சத்து 28ஆயிரத்து 596 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதுபோல 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 60 ஆயிரத்து 403 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 39 ஆயிரத்து 590 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி 27 ஆயிரத்து 993 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து, கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் தடுப்பூசிகளை அனைவரும் செலுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இம்முகாமில் துணை இயக்குனர் (சுகாதாரம்) ராம்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story