13 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகாசி வட்டாரத்தில் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி
சிவகாசி வட்டாரத்தில் 352 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்து கொண்டு 13,230 பேர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். இதில் முதல் தவணை தடுப்பூசியை 1,500 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 10,485 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 1,245 பேரும் செலுத்திக்கொண்டனர். திருத்தங்கல் இந்திரா நகர் பகுதியில் நடைபெற்ற முகாமை சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் தொடங்கி வைத்தார். அப்போது மண்டல தலைவர் குருசாமி, மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகள் சித்திக், கந்தசாமி, ஆசிர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் திருத்தங்கலில் உள்ள அம்மா உணவகத்துக்கு சென்ற மேயர் சங்கீதா இன்பம் அங்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டு ஆய்வு செய்தார். உணவுகளை தரமாகவும், சுவையாகவும் வழங்க அம்மா உணவக ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.
Related Tags :
Next Story