23½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
23½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தற்போது வாரம்தோறும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் 1500 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கையை அடுத்த சூரக்குளம் கிராமத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் சுகாதாரத்துறை துனை இயக்குனர் ராம்கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் வழக்கமாக நடைபெறும் அனைத்து இடங்களிலும், சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் ஆகிய இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்பட 1, 500 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு, மேலும், இரண்டாம் தவணை செலுத்த வேண்டிய நபர்கள் உள்ள கிராமங்களில் அவாகள் வசிக்கும் பகுதிகளிலேயே சிறப்பு முகாம்களும் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 23 லட்சத்து 46ஆயிரத்து 523 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 11 லட்சத்து 40ஆயிரத்து 567 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள ஏதுவாக நடைபெற்று வரும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.