350 பேருக்கு கொரோனா தடுப்பூசி


350 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

சிவகாசியில் 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மேட்டமலையில் இயங்கி வரும் ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உப்பத்தூர் வட்டார சுகாதார மையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு கல்லூரி தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். செயலர் முத்துக்குமார், முதல்வர் கண்ணன், துணைமுதல்வர் பிரவீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி, வசந்தமுத்துசெல்வி, ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.



Next Story