திண்டுக்கல் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தடுப்பூசி


திண்டுக்கல் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 47 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திண்டுக்கல்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் அடைந்து இருக்கிறது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 3 ஆயிரம் இடங்களில் முகாம் நடத்தப்பட்டது.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எனினும் பெரும்பாலான முகாம்கள் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடத்தப்பட்டது.

இதன்மூலம் 2 ஆயிரத்து 224 பேருக்கு முதல் தவணையும், 29 ஆயிரத்து 770 பேருக்கு 2-வது தவணையும், 15 ஆயிரத்து 461 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. அந்த வகையில் நேற்று மொத்தம் 47 ஆயிரத்து 455 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.



Next Story