வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 48,662 பேருக்கு கொரோனா தடுப்பூசி


வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 48,662 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

வேலூர் மாவட்டத்தில் 982 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 48,662 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 982 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 48,662 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

982 இடங்களில் சிறப்பு முகாம்

தமிழகத்தில் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி சிறப்பு முகாம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், மார்க்கெட், பஜார், உழவர்சந்தைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்பட 982 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3-ல் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சத்துவாச்சாரி மலையடிவாரத்தில் உள்ள செயின்ட் பால்ஸ் மழலையர் தொடக்கப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாம்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாநகர நல அலுவலர் முருகன் (பொறுப்பு) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

48,662 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. இதில், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். குறிப்பாக 2-வது தவணை கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி அதிகம் நபர்கள் போட்டு கொண்டனர். தடுப்பூசி போடும் பணியில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என்று 700-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் 982 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 48,662 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story