அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்300 படுக்கைகளுடன் தயார் நிலையில் கொரோனா வார்டு


அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்300 படுக்கைகளுடன் தயார் நிலையில் கொரோனா வார்டு
x
வேலூர்

அடுக்கம்பாறை,

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்300 படுக்கைகளுடன் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.

கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள், ஆக்சிஜன் வசதி உள்பட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளன. மேலும், கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தால், அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒத்திகை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது.

அதன்படி, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 300 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து படுக்கைகளுக்கும் தனித்தனியாக மானிட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தப்பட்டு கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் கல்லூரி டீன் திருமால்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம் உள்ளிட்டோர் தலைமையில் மருத்துவ குழுவினருடன் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.


Next Story