கழிவுநீரை ஓடையில் விட்ட கழிவுநீரை ஓடையில் விட்ட 523 வீடுகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்


கழிவுநீரை ஓடையில் விட்ட கழிவுநீரை ஓடையில் விட்ட 523 வீடுகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கழிவுநீரை ஓடையில் விட்ட 523 வீடுகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் கழிவுநீரை ஓடையில் விட்ட 523 வீடுகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது. உறிஞ்சிக்குழாய் அமைக்காவிட்டால் கழிவுநீர் வெளியேறும் பாதை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீரை ஓடையில் விட தடை

வீடுகளில் உள்ள கழிவு நீரை ஓடைகளில் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வீடுகளில் உறிஞ்சிக் குழாய் அமைத்து கழிவு நீரை விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது வீடுகளில் உறிஞ்சிக் குழாய் அமைக்கப்படுகிறது. மேலும் உறிஞ்சிக் குழாய் உள்ள வீடுகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி வருகிறது.

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் உறிஞ்சிக் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வீடுகளில் மட்டுமே உறிஞ்சிக்குழாய் இல்லை. அந்த வீடுகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட தெங்கம்புதூர், ஆளூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீரை பைப் லைன் மூலமாக கழிவுநீர் ஓடையில் விடுவதாக புகார்கள் வந்தன.

அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரை அடைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. நாகர்கோவில் மாநகராட்சி 52-வது வார்டுக்குட்பட்ட தெங்கம்புதூர் பகுதியில் 1,154 வீடுகள் உள்ளன. இதில் 313 வீடுகளில் இருந்து கழிவு நீர் பைப் லைன் மூலமாக கழிவு நீர் ஓடையில் விடப்பட்டது தெரிய வந்தது. உடனே சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

இந்தநிலையில் நேற்று காலை மாநகர சுகாதார அலுவலர் ராஜாராம் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர்.

210 வீடுகளுக்கு நோட்டீஸ்

அங்கு காங்கிரீட் கலவை மூலமாக வீடுகளில் இருந்து கழிவு நீரை ஓடையில் விட முடியாத அளவிற்கு மூடினர். அதன்படி நேற்று ஒரே நாளில் 57 வீடுகளில் காங்கிரீட் கலவை மூலமாக கழிவுநீர் வெளியேற்றும் பகுதியை அடைத்தனர்.

இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சி 1-வது வார்டுக்குட்பட்ட ஆளூர் பகுதியில் 210 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் வழங்கி இங்கு ஒரு வாரமே ஆகிறது. எனவே இன்னும் ஒரு வார காலத்திற்குள் வீட்டின் உரிமையாளர்களே அதை முன் வந்து அடைக்க வேண்டும். உறிஞ்சிக்குழாய் அமைக்க வேண்டும், இல்லாவிட்டால் அதிகாரிகள் காங்கிரீட் கலவை மூலமாக அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story