வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்


வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்
x

வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வேலூர்

வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வாடகை பாக்கி

வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வாடகைதாரர்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு உள்ளது. பல கோடி ரூபாய் வரை நிலுவையில் வாடகை பாக்கி உள்ளது.

அதை வசூலிக்க மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். பலர் வாடகை செலுத்தாமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்தாதவர்களின் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி கடைகள் சீல் வைக்கப்பட்டு வருகிறது.

b

வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் ஏராளமானோர் பாக்கி வைத்துள்ளனர். எனவே இளநிலை பொறியாளர் சீனிவாசன், உதவி வருவாய் அலுவலர் தனசேகர் மற்றும் உதவியாளர்கள் இளஞ்சேரன், விஜயகுமார் ஆகியோர் நேற்று காலை வேலூர் திருப்பதி தேவஸ்தானம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்வாடகை விடப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீண்ட நாட்கள் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த நடவடிக்கையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story