கோரிக்கை அட்டை அணிந்து மாநகராட்சி பணியாளர்கள் போராட்டம்


கோரிக்கை அட்டை அணிந்து மாநகராட்சி பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2023 1:15 AM IST (Updated: 5 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சியில் கோரிக்கைகள் அட்டை அணிந்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அலுவலக பணிகள் பாதிக்கப்படாமல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநில ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.

அரசு கருவூலம் மூலம் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆய்வு கூட்டங்களை அலுவலக நேரத்தில் நடத்த வேண்டும். நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.


Next Story