குளச்சலில்கடலில் தவறி விழுந்த மீனவர் பிணமாக மீட்பு


குளச்சலில்கடலில் தவறி விழுந்த மீனவர் பிணமாக மீட்பு
x

குளச்சலில்கடலில் தவறி விழுந்த மீனவர் பிணமாக மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே உள்ள மேலகுறும்பனையை சேர்ந்தவர் தேவதாசன் (வயது40). குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடித்தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 18-ந் இரவு கடலில் வீசியிருந்த வலையை இழுக்க சென்றார். அங்கு உணவு சாப்பிட்டுவிட்டு கையை கடல்நீரில் கழுவிய போது நிலை தடுமாறி கடலில் விழுந்தார். அப்போது எழுந்த அலையில் அவர் சிக்கி இழுத்து செல்லப்பட்டு மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சக மீனவர்கள் உதவியுடன் தேவதாசனை தேடி வந்தனர்.

3-வது நாளாக போலீசார் மற்றும் உறவினர்கள் 5 வள்ளங்களில் சென்று தேடும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, மதியம் 1.30 மணியளவில் மீனவரின் உடல் துறைமுக பகுதியில் மிதந்தது. இதனை விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் மீனவர்கள் வள்ளத்தில் சென்று உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மீனவர் தேவதாசுக்கு ஜெகதா என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.


Next Story