குடிசை வீடு எரிந்து சேதம்
கொள்ளிடம் அருகே குடிசை வீடு எரிந்து சேதம் அடைந்தது
மயிலாடுதுறை
கொள்ளிடம், ஆக.14-
கொள்ளிடம் ஒன்றியம் கூத்தியம்பேட்டை கிராமத்தை சேர்ந்்த சொக்கலிங்கம் என்பவரின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுப்பினும் குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார். கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story