ரூ. 70 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
திருப்பூர்
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 375 பேர் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9408-ற்கும், குறைந்தபட்சவிலை ரூ.7080-ற்கும் விற்பனையானது.
பருத்தி மொத்தம் ரூ.70 லட்சத்து 22 ஆயிரத்து 536-க்கு 11 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். இந்த தகவலை முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்
Next Story