ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்


ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்
x

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

திருப்பூர்

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

பருத்தி ஏலம்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 905 பேர் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

ரூ.2 கோடி

 வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,056-க்கும் குறைந்தபட்சவிலை ரூ.7 ஆயிரத்து 250-க்கும் சராசரி விலை ரூ.8 ஆயிரத்து 660-க்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 7ஆயிரத்து 618 மூட்டைகள், குவிண்டால் 2 ஆயிரத்து 536.32.

இதன் மதிப்பு ரூ.2 கோடியே 12 லட்சத்து 5 ஆயிரத்து 865 ஆகும். 17 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.


Related Tags :
Next Story