ராசிபுரத்தில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி ஏலம்
ராசிபுரத்தில் 3 ஆயிரத்து 640 மூட்டை பருத்தி ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனது.
ராசிபுரம்:
பருத்தி ஏலம்
ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ராசிபுரம் கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்க கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.
ரூ.1¼ கோடிக்கு விற்பனை
ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 888 முதல் அதிக பட்சமாக ரூ.10 ஆயிரத்து 69-க்கும், சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 900 முதல் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 799-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 583 முதல் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 700-க்கும் ஏலம் போனது.
மொத்தம் 3 ஆயிரத்து 640 மூட்டை பருத்தி ரூ.1 கோடியே 23 லட்சத்துக்கு விற்பனையானது.