ரூ.10¼ லட்சத்திற்கு பருத்தி ஏலம்


ரூ.10¼ லட்சத்திற்கு பருத்தி ஏலம்
x

அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.10¼ லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

தர்மபுரி

அரூர்:

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்திற்கு அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர். இந்த ஏலத்திற்கு விவசாயிகள் 460 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். ஆர்.சி.எச். ரகம் பருத்தி குவிண்டால் ரூ.9,580 முதல் ரூ.10,950 வரை ஏலம் போனது. இதில் ரூ.10.30 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.


Next Story