கொங்கணாபுரத்தில் ரூ.2.85 கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.2.85 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
சேலம்
எடப்பாடி:
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த ஏலத்துக்கு 10,500 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இவை 1,950 லாட்டுகளாக பிரித்து பொது ஏலம் விடப்பட்டது.
இதில் பி.டி.ரக பருத்தி குவிண்டால் ரூ.7,400 முதல் ரூ.8,309 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.7,900 முதல் ரூ.8,799 வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.4,800 முதல் ரூ.5,950 வரை விற்பனை ஆனது. முடிவில் ரூ.2 கோடியே 85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டது.
Next Story