அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.29 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.29 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.29 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
பருத்தி
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. பருத்தி 1,466 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 859-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 369-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.29 லட்சத்து 44 ஆயிரத்து 470-க்கு விற்பனையானது.
15 ஆயிரம் தேங்காய் கொண்டுவரப்பட்டு இருந்தது. இது ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.18.06-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.23.26-க்கும் ஏலம் போனது. மொத்தம் 27 ஆயிரத்து 969 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய்
கொப்பரை தேங்காய் 58 மூட்டை கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக 7 ஆயிரத்து 209 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 7 ஆயிரத்து 729 ரூபாய்க்கு ஏலம் போனது, மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 594 ரூபாய்க்கு விற்பனையானது.
ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, கோவை, தருமபுரி பகுதி வியாபாரிகள் விளைபொருட்களை ஏலம் எடுத்து சென்றனர்.