கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

தஞ்சாவூர்

கும்பகோணம்

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

இதற்கு தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா தலைமை தாங்கினார். கும்பகோணம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி, விளம்பர மற்றும் பிரசார கண்காணிப்பாளர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கும்பகோணம் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து விவசாயிகள் ஆயிரத்து 144 லாட் பருத்தியை கொண்டு வந்தனர். இதில் கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர் மற்றும் செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்துகொண்டு 1,100 குவிண்டால் பருத்தியை ரூ. 98 லட்சத்துக்கு கொள்முதல் செய்தனர். ஏலத்தில் பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 509-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 429-க்கும் விலைபோனது.


Related Tags :
Next Story