கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்;அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7ஆயிரத்து233-க்கு விலைபோனது

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் பருத்தி விவசாயிகள் 928 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், செம்பனார்கோவில், தேனி, அன்னூர், கொங்கணாபுரம் மற்றும் ஆக்கூர் முக்கூட்டு ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 வியாபாரிகள் பருத்தி ஏலம் எடுத்தனர். அதில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு பருத்தி ரூ.7 ஆயிரத்து 233-க்கும், குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 589-க்கும் விலைபோனது.


Next Story