வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

திருவாரூர்

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ரமேஷ் (பொறுப்பு) முன்னிலையில் நடந்தது. ஏலத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியினை கொண்டு வந்தனர். இதில் 7 வியபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 496-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 419-க்கு விலைபோனது. சராசரி விலையாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 189-க்கும் ஏலம் போனது. விவசாயிகள் தங்களது பருத்தியினை நன்கு உலர்த்தி கொண்டுவந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பருத்தியினை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு 2 இருப்பு வைப்பறைகள் தயார் நிலையில் உள்ளது. விவசாயிகளிடம் இருந்து பருத்தி அதிக அளவில் வரும் நிலையில் திறந்தவெளியில் பருத்தியினை பாதுகாப்பாக வைத்திடும் வகையில் தற்காலிக கூரைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியினை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெறலாம் என ஒழுங்குமுறை விற்பனை கூட மேலாளர் வீராச்சாமி தெரிவித்தார்.


Next Story