ரூ.14.62 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.14½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
தஞ்சாவூர்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையிலும், மேற்பார்வையாளர் அன்பழகன் முன்னிலையிலும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தம் 240 குவிண்டால் பருத்தி கொண்டு வரப்பட்டிருந்தது. கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர் மற்றும் செம்பனார்கோவில் பகுதிகளை சேர்ந்த 6 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில், மொத்தம் ரூ.14 லட்சத்து 62 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் போனது. இதில், அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7,669-ம், குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.5,099-க்கும், சராசரியாக ரூ.6094-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story