ரூ.46 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ரூ.46 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 30 April 2023 1:00 AM IST (Updated: 30 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

எடப்பாடி:-

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில், சேலம், நாமக்கல் மற்றும் அண்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 1,950 பருத்தி மூட்டைகள் 350 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் (100 கிலோ) ரூ.6 ஆயிரத்து 700 முதல் ரூ.7 ஆயிரத்து 869 வரை விற்பனையானது.

இதே போல் டி.சி.எச் ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்று ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரத்து 550 வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.4 ஆயிரத்து 600 முதல் ரூ.5 ஆயிரத்து 416 வரை விற்பனை ஆனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 46 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.


Next Story