ரூ.1.43 கோடிக்கு பருத்தி ஏலம்


ரூ.1.43 கோடிக்கு பருத்தி ஏலம்
x

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.43 கோடிக்கு பருத்தி ஏலம்

திருப்பூர்

மூலனூர்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம் தோறும் பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. அதன்படி பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 590- நபர்கள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7,619-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,550-க்கும் சராசரி விலையாக ரூ.7,250-க்கும் விற்பனையானது.

பருத்தியின் மொத்த அளவு 6,444 மூட்டைகள், குவிண்டால் 2021.60 மதிப்பு ரூ.1 கோடியே 43 லட்சத்து 15 ஆயிரத்து 252. இந்த மறைமுக ஏலத்தில் 14 வியாபாரிகள் பங்கேற்றனர்.



Next Story