ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x

குடவாசலில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

திருவாரூர்

குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தை திருவாரூர் விற்பனைக் குழு செயலாளர் சரசு பருத்தி கொள்முதலை தொடங்கி வைத்தார். குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மேற்பார்வையாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். குடவாசல் பகுதியில் உள்ள செல்லூர், இலையூர், அகரஓகை, மஞ்சக்குடி, புதுக்குடி, சிமிழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 25 விவசாயிகள் ஏலத்திற்கு பருத்தியை கொண்டு வந்தனர். இந்த பருத்தியை ஏலம் எடுப்பதற்காக கும்பகோணம், கோயம்புத்தூர், பண்ருட்டி, செம்பனார்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 10,159-க்கும், குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ரூ.8,364-க்கும், சராசரியாக குவிண்டால் ரூ.9.439-க்கு விலை போனது. பருத்திக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story