ரூ.3 கோடியே 82 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


ரூ.3 கோடியே 82 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
x

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3 கோடியே 82 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10,409-க்கு விலை போனது.

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3 கோடியே 82 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10,409-க்கு விலை போனது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட வெளியிடங்களில் வந்திருந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.3 கோடியே 82 லட்சத்துக்கு ஏலம்

விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை வியாபாரிகள் பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர். இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர். இதில், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10 ஆயிரத்து 409-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 689-க்கும் விலை கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 627-க்கு விற்பனையானது. இந்த மறைமுக ஏலத்தில் மொத்தம் ரூ.3 கோடியே 82 லட்சத்து 2 ஆயிரத்து 891-க்கு பருத்தி விற்பனையானது.


Related Tags :
Next Story