பருத்தி விவசாயிகள் சாலை மறியல்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்பு பருத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமையில் இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில், பாபநாசம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பருத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் கலெக்டர்(வருவாய்) சுகபுத்ரா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ் பாபு, கண்காணிப்பாளர் தாட்சாயினி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள், வருவாய் ஆய்வாளர் வரதராஜன் உள்பட பலர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின்போது வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் ஏலம் நடத்தப்படும் என சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியில் காரணமாக பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,