வைகை தண்ணீரை பயன்படுத்தி பருத்தி விவசாயம் செய்யும் விவசாயிகள்


வைகை தண்ணீரை பயன்படுத்தி பருத்தி விவசாயம் செய்யும் விவசாயிகள்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் உள்ள வைகை தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் உள்ள வைகை தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

வைகை தண்ணீர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட பருத்தி, மிளகாய் விவசாயம்தான் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் பருவமழை சீசனை எதிர்பார்த்துதான் பருத்தி, நெல், மிளகாய் உள்ளிட்ட விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்குகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் பருவமழை சீசனில் போதிய அளவு மழையே பெய்யாததால் நெல் விவசாயம் மாவட்டம் முழுவதும் அதிகமாகவே பாதிக்கப்பட்டன.

அதே நேரம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சுற்றிய அதிகமான கிராமங்களில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் நன்றாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது ஆர்.எஸ் மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்து சேர்ந்தது.

பருத்தி செடிகள்

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் வைகை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டதால் பெரிய கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி நெற்பயிர்கள் காப்பாற்றப்பட்டது. இதனிடையே ஆர்.எஸ் மங்கலம் பெரிய கண்மாயில் தற்போது வரை ஓரளவு தண்ணீர் இருப்பு உள்ளால் இந்த தண்ணீரை பயன்படுத்தி பருத்தி விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை சுற்றியுள்ள பல கிராமங்களில் பெரிய கண்மாயில் இருப்பு உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் பருத்தி செடிகளுக்கு பாய்ச்சுவதில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பருத்திச் செடிகளும் ஓரளவு நன்றாக வளர்ந்து வருகின்றது.

ஆர்வமுடன்

அதேபோல் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள மங்கலம் கண்மாயிலும் தண்ணீர் அதிக அளவு இருப்பு உள்ளதால் அந்த கிராமத்திலும் கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி பருத்தி விவசாய பணிகளில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்.எஸ் மங்கலம், மங்கலம் கண்மாய்களில் தண்ணீர் இருந்தாலும் சோழந்தூர், திருப்பாலைக்குடி, சிங்கனேந்தல் கழனிக்குடி உள்ளிட்ட பல கிராமங்களிலும் தண்ணீர் இல்லாமல் பருத்தி செடிகள் காய்ந்து வருகின்றன.


Next Story