பாபநாசத்தில், பருத்தி ஏலம்


பாபநாசத்தில், பருத்தி ஏலம்
x

பாபநாசத்தில், பருத்தி ஏலம் நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்;

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது.பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சராசரியாக 300 டன் பருத்தி ஏலத்துக்கு எடுத்து வரப்பட்டது. கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், குத்தாலம், சேலம், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து 2 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.2 கோடி ஆகும். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 239-க்கும், குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6 ஆயிரத்து 819-க்கும் விலை போனது.


Next Story