810 குவிண்டால் பருத்தி ரூ.51 லட்சத்துக்கு ஏலம்
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் 810 குவிண்டால் பருத்தி ரூ.51 லட்சத்துக்கு ஏலம் போனது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் 810 குவிண்டால் பருத்தி ரூ.51 லட்சத்துக்கு ஏலம் போனது.
பருத்தி கொள்முதல்
மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மேலத்தெருவில் உள்ள கி்டங்கு வளாகத்தில் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்தனர்.மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன், மேலாண்மை இயக்குநர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.
ரூ.51 லட்சத்துக்கு ஏலம்
இதில் 810 குவிண்டால் பருத்தி ரூ.51 லட்சத்துக்கு ஏலம் போனது. இதைப்போல ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் பருத்தி ஏலம் விடப்படும் என்றும், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அனைத்து பருத்தி விவசாயிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம். பருத்தி விலைக்கு உரிய தொகையை அன்ைறய தினமோ அல்லது விடுமுறை நாளாக இருந்தால் மறு வங்கி வேலைநாட்களில் உடனடியாக விவசாயிகள் வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.