159 டன் பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம்
பாபநாசத்தில் 159 டன் பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம் போனது
தஞ்சாவூர்
பாபநாசம்;
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் கண்காணிப்பாளர் தாட்சாயணி தலைமையில் நடைபெற்றது. ஏலத்தில் 1217 குவியல்கள் பருத்தி கொண்டு வரப்பட்டது. பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 800 விவசாயிகள் தங்களது பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 159 டன் பருத்தி ரூ.1 கோடியே 4 லட்சத்துக்கு விற்பனை செய்து கொடுக்கப்பட்டது. ஏலத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளை சார்ந்த 10 வணிகர்கள் கலந்து கொண்டனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7132-க்கு விலை போனது.
Related Tags :
Next Story