ரூ.89 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


ரூ.89 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
x

ரூ.89 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருப்பூர்

மூலனூர்

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 420 விவசாயிகள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் கொள்முதல் செய்தனர். அதன்படி பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8,292-ற்கும், குறைந்தபட்சவிலை ரூ.6,840- ற்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 89 லட்சத்து 5 ஆயிரத்து 91-க்கு ஏலம்போனது. இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் திரு.கண்ணன் (பொறுப்பு) தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்




Next Story