4ஆயிரத்து100 குவிண்டால் பருத்தி ரூ.2¾ கோடிக்கு கொள்முதல்


4ஆயிரத்து100 குவிண்டால் பருத்தி ரூ.2¾ கோடிக்கு கொள்முதல்
x

செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4,100 குவிண்டால் பருத்தி ரூ.2¾ கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மயிலாடுதுறை

பொறையாறு;

செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4,100 குவிண்டால் பருத்தி ரூ.2¾ கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பருத்தி ஏலம்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் இ-நாம் முறையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

ரூ.2¾ கோடிக்கு கொள்முதல்

கண்காணிப்பாளர் சங்கர்ராஜா, இணை செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.6ஆயிரத்து679-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5ஆயிரத்து845-க்கும், சராசரி விலையாக ரூ.6ஆயிரத்து245-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் சுமார் 4 ஆயிரத்து100 குவிண்டால் பருத்தி ரூ.2¾ கோடிக்கு கொள்முதல் நடைபெற்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.இந்த ஏலத்தில் 896 விவசாயிகள் கலந்து கொண்டனர். பருத்தியை, தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும் ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 19 வியாபாரிகள், மில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.


Next Story