ஈரோட்டில் தலைமை ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு


ஈரோட்டில் தலைமை ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு
x

ஈரோட்டில் தலைமை ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு

ஈரோடு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிாியர்கள், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு இடமாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அதன்படி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் அரசு மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் ஈரோடு மாவட்டத்துக்குள் இடமாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் 9 பணியிடங்களுக்கு மொத்தம் 17 தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட கலந்தாய்வில் பணி இடமாறுதல் பெற்றனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடுநிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும், அரசு மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிாியர்கள் வெளிமாவட்டங்களில் இடமாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வும் நடக்கிறது.


Next Story