பழுதான மின்மோட்டாரை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடத்துடன் மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் தர்ணா கடலூரில் பரபரப்பு


பழுதான மின்மோட்டாரை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடத்துடன் மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் தர்ணா கடலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பழுதான மின்மோட்டாரை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடத்துடன் மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கடலூர்

கடலூர் மாநகராட்சி 32-வது வார்டு நத்தவெளி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின்மோட்டார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதானது. இதுகுறித்து கவுன்சிலர் பரணிமுருகன் மற்றும் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், பழுதான மின்மோட்டாரை சரிசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதில் பாதிக்கப்பட்ட மக்கள், அப்பகுதி கவுன்சிலர் பரணிமுருகனிடம் முறையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பரணிமுருகன் நேற்று காலை காலி குடத்துடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், பழுதான மின்மோட்டாரை சரிசெய்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டபடி மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்த வந்த கடலூர் புதுநகர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பரணிமுருகனிடம் இன்னும் ஓரிரு நாளில் மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story