தேன்கனிக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் கவுன்சிலர் வெளிநடப்பு
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து தேன்கனிக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் கவுன்சிலர் வெளிநடப்பு செய்தனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 5-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அப்துர் ரஹ்மான் எழுந்து ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து பேசி விட்டு வெளிநடப்பு செய்தார். மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகளுடன் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டதால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார். தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.